பிரதமர் மோடிக்கு மகராஷ்டிர முதல்வரின் மனைவி அம்ருதா தெரிவித்த வாழ்த்துக்கு எதிர்ப்பு

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவின் மனைவி பிரதமர் மோடிக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிரதமர் மோடி தனது 69வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை எடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்தன. அந்தவகையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவின் மனைவி பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறி டுவிட் செய்திருந்தார்.

அதில் நாட்டின் தந்தை பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்க நம்மை தூண்டுபவர் பிரதமர் மோடி என்றும் குறிப்பிட்டிருந்தார். மகாத்மா காந்தி தேசத் தந்தை என நாட்டு மக்களால் போற்றப்படும் நிலையில் பிரதமர் மோடியை தேசத்தந்தை என கூறப்பட்டிருந்தது ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கண்டித்து வருகின்றனர்.


Leave a Reply