கும்பகோணம் அருகே மது போதைக்கு அடிமையான தந்தையால் ஆற்றில் வீசப்பட்ட குழந்தையை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கும்பகோணம் நகராட்சியில் ராஜபாண்டி என்பவர் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ரேணுகா கணவரை பிரிந்து பத்தடி காலப்பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான ராஜபாண்டி, லாவண்யா மற்றும் ஸ்ரீமதி என தன்னுடைய இரண்டு மகள்களையும் தூக்கி சென்று அரசலாற்றில் வீசியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் குழந்தை லாவண்யாவை மீட்டுள்ளன. இதனையடுத்து மற்றொரு குழந்தை ரேணுகாவை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.