அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார். சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறினார். தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply