சவுதி எண்ணெய் ஆலை மீதான தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இதற்கு காரணம் என கருதப்படுகிறது. சவுதி எண்ணெய் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

 

இதனால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாயை எட்டும் என கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால் வாடகை கார், ஆட்டோ கட்டணங்கள் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது .கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க ஒரு வாகனத்திற்கு ஆறு ரூபாய் வரை எரிபொருள் செலவானதாகவும், தற்போதுள்ள விலையேற்றத்தால் எரிபொருளுக்கான செலவு கூடுதலாக வாய்ப்பு உள்ளது.

 

எனவே அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலவியுள்ளது. இது தவிர கச்சா எண்ணை விலை அதிகரிப்பின் எதிரொலியாக விமான பயண கட்டமும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விமானங்களுக்கு பயன்படுத்தப்படும். ஏ‌டி‌எஃப் எனப்படும் எரிபொருளின் விலையும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் பயண கட்டணம் 10 முதல் 15 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வாகன உற்பத்தி மற்றும் விற்பனை துறையில் தொடர் சரிவு காணப்படும் நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அத்துறைக்கு மேலும் பேரிடியாக உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply