நாகை மாவட்டத்தில் சரியாக படிக்கவில்லை என்று கூறி மாற்றுத்திறனாளி மாணவியின் கைகளில் ஆசிரியர் கத்தியால் குத்திய கொடூரம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை அருகே கீழேயூரைச் சேர்ந்த பவித்ரா என்ற மாற்றுத்திறனாளி சிறுமி அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பவித்ரா சரியாக படிக்கவில்லை என்று திட்டிய ஆசிரியர் பாஸ்கர் ஒருகட்டத்தில் பவித்ராவின் கையில் கத்தியால் குத்தி கிழித்துள்ளார்.
இதில் ரத்தம் கொட்டிய வேதனையில் துடிதுடித்த பவித்ரா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மாற்றுத்திறனாளி மாணவியை ஆசிரியர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.