சென்னையில் கார் ஓட்டுனர் பிணமாக கண்டுபிடிப்பு!
சென்னையிலிருந்து குற்றாலத்திற்கு சவாரி சென்ற கார் ஓட்டுனர் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகநாதன் சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஐந்தாம் தேதி குற்றாலத்திற்கு நாகநாதன் சவாரி சென்றார்.
சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சில அவரது காரில் சென்றதாக தெரிகிறது. குற்றாலம் சென்று விட்டதாகவும் ஒன்பதாம் தேதி மீண்டும் சென்னை திரும்பி விடுவோம் என தனது உரிமையாளர் சுந்தரிடம் நாகநாதன் கூறியிருக்கிறார். கடைசியாக எட்டாம் தேதி அவருடன் சுந்தர் பேசியுள்ளார். அதன்பின் நாகநாதன் என்ன ஆனார் அவர் சென்ற கார் என்னவாயிற்று என்று தெரியவில்லை. இது தொடர்பாக அசோக்நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நாகநாதன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
மலையடிவாரத்தில் 4 அடி ஆழம் மழைநீர் சேகரிப்பு கால்வாயில் இருந்து நாகநாதன் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவரோடு சென்ற காரை காணவில்லை நாகநாதனின் காரில் பயணித்தவர்கள் கொடுத்த முகவரி போலியானது என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவே அவர்கள் நாகநாதனை கொலை செய்துவிட்டு காரில் திருடிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




