நடிகை இலியானாவுக்கு பேய் பிடிச்சு இருக்கும்..!

நடிகை இலியானாவுக்கு பேய் பிடித்து இருக்கக்கூடும் என அவரது ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை தனது டுவிட்டரில் பதிவிட்ட இலியானா தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கக்கூடும் என சந்தேகத்துடன் தெரிவித்துள்ளார். காலை எழுந்ததும் தன் கால்களில் மர்மமான முறையில் காயங்கள் இருப்பதாகவும் கவலையுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது குறித்து கருத்து தெரிவித்து வரும் அவரது ரசிகர்கள் காஞ்சுரிங் திரைப்படத்துடன் ஒப்பிட்டு கேலி செய்து வருகின்றனர். இலியானாவுக்கு ஒருவேளை பேய் பிடித்து இருக்கக்கூடும் என்றும் அதை பரிசோதிக்க அவரது அறையில் கேமரா பொருத்தி பார்க்குமாறு சீரியஸான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

 

ஒரு சிலர் படுக்கையின் ஓரத்தில் காலை கழிக்கும் வகையில் ஏதேனும் பொருள் கடந்திருக்கும் என்பதால் சரிபார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். ஒரு சிலர் அடுத்த படத்தில் பேயாக நடிக்கிறீர்களா அதற்குத்தான் இதுவா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இரவில் நொறுக்குத்தீனிகளை தேடி படுக்கை முதல் பிரிட்ஜ் வரை நடந்து வருவதாக இலியானா கேலியாக பதிலளித்துள்ளார்.


Leave a Reply