தலையை வெட்டி விடுவேன் என்று பாஜக நிர்வாகியை ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் மிரட்டியது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் முதல்வராக இருக்கிறார். இம்மாநிலத்தில் விரைவாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் மனோகர் லால் கட்டார் ஈடுபட்டார். முதலமைச்சரை பாஜகவினர் வரவேற்றனர். தொண்டர் ஒருவர் தங்க நிறத்தினாலான கோடாரியை பரிசாக அளித்தார். இந்த கோடாரி என்பது எதிரிகளை அழிக்கும் என்று பேசிய போது வாகனத்தில் பின்புறத்தில் நின்று இந்த மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் ஒருவருக்கு தலையில் கிரீடத்தை வைத்தார்.
இதனால் கோபமடைந்த மனோகர் லால் கட்டார் கையில் வைத்திருந்த கோடாரியை காட்டில் என்ன செய்கிறீர் தலையை வெட்டி விடுவேன் தள்ளி நில்லுங்கள் என்று கோபத்துடன் பேசினார். இதையடுத்து தன் தவறை உணர்ந்து முதல்வரிடம் அவர் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் கோபமும் ஆணவம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. மனோகர் லால் கட்டார் இன் செயலுக்கு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன முதலமைச்சர் இவ்வாறு கோபப்படுவது இது முதல் முறை அல்ல. அண்மையில் கர்னால் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரை கட்டார் தள்ளிவிட்டார். இது தொடர்பான வீடியோவும் அப்போது வேகமாக பரவியதும் குறிப்பிடத்தக்கது.