ஒரு ரூபாய் இட்லி விற்கும் பாட்டிக்கு ஆட்சியர் நேரில் அழைத்து வாழ்த்து

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாதாஸ் பாட்டியை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பாராட்டினார். கோவை மாவட்டத்தில் ஒரு பகுதியில் 85 வயதான பாட்டி தள்ளாடும் வயதிலும் உரலில் மாவு இட்லி சுற்றி வைத்து வருகிறார். ஒரு இட்லியின் விலை ஒரு ரூபாய் ஒருபோதும் இட்லியின் விலையை உயர்த்தவில்லை என்று கூறி நெகிழ வைத்த இந்த பாட்டி, ஒரு ரூபாய் இட்லி குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றன.

இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கமலாதாஸ் பாட்டியை முகாம் அலுவலகத்திற்கு வரச்செய்து பரிசளித்து பாராட்டினார். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறு ஆட்சியர் பாட்டியிடம் பணிவோடு கூறினார்.


Leave a Reply