--- --:--:-- --

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது !

8d5b7203-557d-451f-8dc2-4dc77b82b86a

இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மேலும் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் அ தி மு க மாவட்ட செயலாளர் எம் ஏ முனியசாமி தலைமையில் முன்னாள் எம் பி அன்வர் ராஜா மற்றும் அமைச்சர் பெருமக்கள்.கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்,தி மு க மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின், கனிமொழி, மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர், அதேபோல் அ ம ம மு க மாவட்ட செயலாளர் வ து ந ஆனந்த் தலைமையில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்,

இம்மானுவேல் சேகரன் வாழ்க்கை குறிப்பு : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் வேதநாயகம் (பள்ளி ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்) ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாக 1924 அக்டோபர் 9ஆம் தேதியில் பிறந்தார். மேலும் இவர் சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் திகழ்ந்துள்ளார் .இவர் 18 வயதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடியதில் 3 மாதம் சிறை தண்டனையும் பெற்றுள்ளார்.

மேலும் 19 வயதில் இரட்டை குவளை முறைக்கு எதிராக தீண்டாமையை ஒழிக்க 1954-இல் மாநாடு நடத்தியவர் மற்றும் இந்திய ராணுவத்தில் 1943 ஆம் ஆண்டு சேர்ந்து அவில்தாராக பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு 1946இல் இதம்பாடல் கிராமத்தை சேர்ந்த அமிர்தம் கிரேஸ் எனும் ஆசிரியை திருமணம் செய்து இவர்களுக்கு மேரி வசந்த ராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சிராணி, ஆகிய பெண் குழந்தைகள் உள்ளனர் மேலும் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதி இடைத் தேர்தலுக்கு பின்னர் அந்த தொகுதியில் சாதிக்கலவரம் ஏற்படக்கூடிய சூழல் உருவான நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டம் நடைபெற்று முடிந்த மறுநாள் தினம் இமானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார், மற்றும் இந்த அமைதிக் கூட்டத்தில் இமானுவேல்சேகரன் ஓர் அணியாகவும் (காங்கிரஸ்) முத்துராமலிங்கத்தேவர் ஒரு அணியாகவும் (பார்வர்டு பிளாக்) கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது மேலும் இந்திய அஞ்சல் துறை இமானுவேல் சேகரனின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon