உணவில் புழு !முருகன் இட்லி கடையின் உணவு தயாரிக்கும் குடோனுக்கு சீல்!
தரமற்ற உணவு மற்றும் மது பாட்டில்கள், புழு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து முருகன் இட்லி கடையின் உணவு தயாரிப்பு குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் முருகன் இட்லி கடை என்ற பெயரில் 27 கிளைகள் உணவகம் இயங்கி வருகிறது.
இந்த உணவகத்தின் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உணவு தயாரிக்கப்பட்டு 27 கிளைகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் முருகன் இட்லிக் கடையில் வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாகவும் உணவில் புழுக்கள் எளிதாகவும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள உணவு தயாரிக்கும் குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப் படுவது தெரிய வந்தது. இதையடுத்து நிறுவனத்தின் உணவு தயாரிக்கும் குடோனுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




