அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் வரும் 15ஆம் தேதி முதல் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று கட்சி அறிவித்துள்ளது. இதன்படி 15ஆம் தேதி சோழிங்கநல்லூர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உரையாற்றுகிறார்.

 

அதே நாளன்று விருகம்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உரையாற்ற உள்ளார். பிற இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் அமைச்சர்களும் எம்பிக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply