தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால் ஆசிரியை தற்கொலை முயற்சி

சிவகங்கை அருகே தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி ஆசிரியை விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அடுத்த சித்தலூர் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிற.து இங்கு தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து பள்ளி வளாகத்திலேயே விஷமருந்தி தற்கொலை என்று ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆசிரியர் தலைமை ஆசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply