சிறந்த தூய்மை பராமரிப்பு செய்வதற்கான இரண்டாவது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு கடந்த வாரத்தில் ஜல்சக்தி அமைச்சர்கள் விருதுகளை வழங்கியது.
அதன் தூய்மை பராமரிப்புக்கு இரண்டாவது இடமாக மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் கடந்த சனிக்கிழமை பெற்றுக்கொண்டார்.
குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 ஈகழிவறைகள் குப்பைகளை பிரித்து சேகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகள் பைகளுக்கு தடை விதிப்பு சுழற்சி முறையில் சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.