லேண்டார் இருக்குமிடம் கண்டுபிடிப்பு! தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ முயற்சி!

நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருக்குமிடம் தெரியவந்திருப்பதாக இஸ்ரோ சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிலவைத் தொட 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சமயத்தில் விக்ரம் லெட்டரில் சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இஸ்ரோவையும், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தது.

 

எனினும் மனம் தளராத விஞ்ஞானிகள் லேண்டரின் சிக்னலை பெறுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து தீவிரப் படுத்தி வந்தனர். இந்த சூழலில்தான் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி கொண்டிருக்கும் இடத்தை கண்டறிய முடியும் என்ற ஆறுதலான செய்தியை பகிர்ந்தார் இஸ்ரோ தலைவர் சிவன். அவர் கூறியபடியே நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சிவன்.

 

நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டர் முழுமையான வடிவத்தில் உள்ளதாகவும் ஆர்பிட்டால் எடுத்தவரின் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். லேண்டர் இருப்பிடம் தெரிய வந்திருப்பதால் அடுத்த 12 நாட்களுக்கு அதை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என்றும் இதன்மூலம் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை விக்ரம் லேண்டர் சமிங்கை அனுப்பி வைத்து பின்னர் சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றால் அது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவில் இது சரித்திர சாதனையாக அமையும் என்று தெரிவித்தார்.


Leave a Reply