காதலிக்கு செலவு செய்த பணத்தை வாங்கி தருமாறு கேட்ட இளைஞர்!

காதலித்த ஆண் கைவிட்டால் போலீசில் பெண்கள் புகார் கொடுப்பது வழக்கம் ஆனால், பெண் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக இளைஞர் ஒருவர் சென்னை போலீசில் புகார் அளித்திருக்கிறார். மதுரை வாயில் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். சென்னை மதுரவாயல் மேட்டு குப்பத்தை சேர்ந்தவர் 21 வயதான விக்கி என்ற இளைஞர்.

 

இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் திங்கட்கிழமை இரவு மதுரவாயல் காவல் நிலையத்தில் போதையில் தள்ளாடியபடி சென்றார். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண் இதுவரை தன்னை காதலித்து விட்டு தற்போது காதலிக்க மறுப்பதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். குடிபோதையில் அந்த நபர் உளறுவதாக போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த விக்கி தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடால் மாம்பழத்தை அறுப்பது போல் சரசரவென கையை அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலைய வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போதும் போலீசார் கண்டுகொள்ளாததால் பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவே நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார்.

 

இதையடுத்து அங்கிருந்த போலீசார் இளைஞரை அழைத்து சென்று சமாதானம் பேசினர். மேலும் தான் காதலித்த பெண் தன்னை காதலித்த போது அவருக்கு 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாகவும்., அந்த தொகையை வாங்கி தர வேண்டும் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். போதையில் இருந்ததால் போதை தெளிந்த உடன் வருமாறு இளைஞரை நைசாக பேசி போலீசார் அனுப்ப முற்பட்டனர்.

 

இதற்கு மேல் இங்கு இருந்து பயனில்லை என்று கூறிவிட்டு தனது காதலியின் குடும்பத்தாரிடம் அந்த பணத்தை கேட்டு வாங்கிக் கொள்வதாக கூறி போதையில் தள்ளாடி புறப்பட்டு சென்றார் அந்த இளைஞர். காதலிக்கும்போது காதலித்து செலவு செய்த பணத்தை திரும்ப கேட்டு இளைஞர் புகார் கொடுக்க வந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply