சிலை கடத்தல் விவகாரம் – பொன்மாணிக்க வேல் நேரில் ஆஜராகி வாதம்!

ஜாமினில் உள்ள அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீண்டும் பணி வழங்கக் கூடாது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார்.

 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் மாயமான வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் திருமகள் தமக்கு மீண்டும் பணி வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அடுத்து வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொன் மாணிக்கவேல் உரிமைகளையும் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கூடாது என்றும், அவருக்கு மீண்டும் பணி வழங்க கூடாது என்றும் வாதிட்டார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்மாணிக்கவேல், கும்பகோணத்தில் உள்ள சிலை திருட்டு தடுப்பு காதல் பிரிவு அலுவலகத்திற்கு போதுமான இட வசதி இல்லை என நீதிமன்றத்தில் முறையிட்டது தெரிவித்தார்.


Leave a Reply