கோவை இராமானுஜம் நகரில் காலபைரவருக்கான திருக்கோவில் அமைத்து அதன் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்று 41நாள் கொண்ட மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இராமானுஜம் நகரில் அஸ்ட காலபைரவர் திருக்கோவில் திருப்பணிகள் நடைபெற்று அதன் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கால பைரவருக்கு 41நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது இதில் 11வது மன்டல பூஜை இன்று நடைபெற்றது. இதில் காலபைரவருக்கு, 11 நெய்வேத்ய பொருட்களான பால், பன்னீர், இளநீர், நெய், தேன், தயிர், தண்ணீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மண்டல பூஜை காலத்தில் பைரவர் உச்ச கட்ட நிலையில் காட்சியளிப்பார்.

அதனால், காலபைரவரின் அபிஷேக நிலையினை பக்தர்களுக்கு காட்சி படுத்த கூடாது என்பது நமது முன்னோர்கள் வாக்கு. அதனை கடைபிடித்து அபிஷேகம் நடைபெறும் தருணத்தில் திரையிட்டு மூடிய நிலையில் 11அபிஷேகங்கள் நடைபெற்றது. சாந்தமடைந்த நிலையில் சந்தனம் பூசிய நிலையில் சந்தன கால பைரவர் காட்சிபுரிந்தார்.
கால பைரவரின் மண்டல் பூஜையில் கலந்து கொள்வதனால், கண்திருஷ்டி, ஜென்ப பகை, பில்லி, சூனியம், பூஜை போன்ற தீய சக்திகள் நம்மை விட்டு விலகி ஓடும் என்பது மக்களின் கருத்து. இத்திருக்கோயில் நடைபெறும் 11வது மண்டல பூஜையினை கோவை மாவட்ட ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் செந்தில் குமார் தனது குடும்ப சகிதமாக கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக அன்னதானத்தினையும் வழங்கினார்.

மேலும், இந்த 11வது மண்டல பூஜையில் கோவை மாவட்ட ரியல் எஸ்டேட் சங்கத்தின் தலைவர் ஹென்றி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மண்டல பூஜையிலும் அன்னதான நிகழ்விலும் கலந்து கொண்டனர்.






