நிலக்கரி, பெட்ரோலியம் உட்பட நாட்டின் அடிப்படையான எட்டு தொழில் துறையும் ஜூலை மாதத்திற்கான வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக சரிந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த எட்டு துறைகளின் வளர்ச்சி விகிதம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் சரிவு அம்பலமாகியுள்ளது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் மூலம் மின்சாரம் சிமெண்ட் உள்ளிட்ட துறைகளில் கடந்த ஜூலை மாதத்தில் வளர்ச்சி விகிதம் 2.1 ஆக உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தத் துறையின் வளர்ச்சி விகிதம் 7.3 ஆக இருந்த நிலையில் ஒரே ஆண்டில் 5.2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன.
குறிப்பாக நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட ஐந்து துறைகளின் வளர்ச்சி விகிதம் பூஜியத்திற்கும் கீழ் உள்ளது. அடிப்படை துறைகள் சந்தித்துள்ள இந்த வீழ்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மோசமான நிலையில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதேபோல் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலம் வரையிலும் எட்டு அடிப்படைத் துறைகளில் வளர்ச்சி விகிதம் 2.9 சதவீதம் குறைந்து 3 சதவீதமாக உள்ளது.