நிலாவில் விண்வெளி வீரர் நடப்பது போன்ற வீடியோ வைரல்!

விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் நடப்பது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிகமானோரால் ரசிக்கப்படும் இந்த வீடியோ .விண்வெளியில் எடுக்கப்பட்டது அல்ல. பெங்களூரில் குண்டும் குழியுமாக உள்ள ஒரு சாலையில் எடுக்கப்பட்டது.

 

மோசமான நிலையில் உள்ள சாலையை நிலவின் மேற்பரப்பு போன்று ஓவியர் வரைந்துள்ளார். விண்வெளி வேடமிட்டு ஒருவர் இந்த 3டி ஓவியத்தின் மீது நடந்து செல்லும் ஒருவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். உண்மையில் நிலவில் மனிதன் நடப்பதாக பார்ப்போரை நம்ப வைக்கும் இந்த வீடியோவை உற்று கவனித்தால் பல மேடான சாலையில் ஆட்டோ ஒன்று ஓடுவதும் புலப்படும்.

 

ஹலோ பிபி கமிஷனர் என்ற பெயரில் பெயரிடப்பட்டு பதிவேற்றப்பட்ட வீடியோவை நான்கு மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் 1,400 பேர் லைக் செய்துள்ளனர் 2,500 பேர் இருந்துள்ளனர் என்பது நகரத்தில் உட்கட்டமைப்பு பொறுப்பு காண நிர்வாக அமைப்பாகும்.

 

பெங்களூருவை சேர்ந்த ஓவியர் இதே போல் ஜூன் மாதம் பள்ளமான சாலையில் முதலை ஒன்றையும், 2018 ஆம் ஆண்டு சிலந்திவலை ஒன்றையும் வரைந்து அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார்.


Leave a Reply