சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. எனினும் இரவில் சென்னை ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, வடபழனி, கோயம்பேடு, போரூர் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்தது.
இதேபோல் குரோம்பேட்டை, வேளச்சேரி, பல்லாவரம், அம்பத்தூர் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் காய்ந்து கிடந்த கடலை செடிகள் மீண்டும் உயிர் பெறுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல் நாகை, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.