பிரதமர் மோடியின் வருகையால் கேதார்நாத்தின் ருத்ரா குகைக்கு அதிகமாகும் பயணிகளின் எண்ணிக்கை!

மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலின் சுற்று வட்டப்பாதையில் பல கோவில்கள் உள்ளன. இதனால் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்குள்ள குகைகளில் தியானம் செய்வது வழக்கம். இதற்காக அவர்களிடம் நேரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிக் கட்டத்தில் பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக சென்றார்.

 

அங்கு தரிசனத்தை முடித்து ருத்ரா குகையில் கிட்டத்தட்ட 15 மணி நேரம் தியானம் செய்தார். அப்போது இதுதொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக இருந்தன . ஆனால் மோடியின் வருகைக்கு பிறகு அங்கு வருகை தரும் பக்தர்கள் இரண்டு மூன்று நாட்கள் அமர்ந்து தியானம் செய்கின்றனர்.

 

ருத்ரா குகை முன்பைவிட அதிக வசூலைப் பெற்று வருகிறது. இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் கூறுகையில் இந்திய சுற்றுலாவின் தூதர் பிரதமர் மோடி என்றும் அவர் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடம் முக்கியத்துவம் பெற்று பிரபலம் ஆகி விடுகிறது என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடி வந்து சென்றதிலிருந்து இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் இந்த குகையில் தியானம் செய்வதற்காக முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று கூறினார்.

ஓர் இரவு தங்குவதற்கு ஆயிரத்து 500 ரூபாயும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தங்குவதற்கு 999 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த குகை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்திருப்பதால் தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக கருதப்படுகிறது. ருத்ரா குகையில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

 

செல்போன் வைத்துக்கொள்ள அனுமதி இருந்தாலும் அதை அவசர நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இந்த மின்சாரம்., குடிநீர் வசதி ,கழிவறை, ஹீட்டர் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விருந்தினராக ஒருவருக்கு தேனீர், சிற்றுண்டி, மதிய உணவு, மாலையில் தேநீர், இரவு உணவு ஆகியவை வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இடது கையில் ஒரு மணி வைக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அதை அழுத்தினால் போதும் உடனடியாக உதவியாளர் வந்து நமக்கான தேவைகளை பூர்த்தி செய்வார்.


Leave a Reply