6 மாத கால இடைவெளிக்கு பிறகு போர் விமானத்தை இயக்கிய அபிநந்தன்!

ஆறு மாதங்களுக்குப் பிறகு போர் விமானத்தில் பரந்துள்ள அபிநந்தன். அபிநந்தன் இந்த பெயரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. விமானப்படையின் கமாண்டராக இருந்த அபிநந்தன் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் MIG_21 ரக போர் விமானத்தில் பயணம் செய்துதான் இன்று நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி போர் விமானத்தில் பாகிஸ்தான் விமானங்கள் மீது அபிநந்தன் தாக்குதல் நடத்தினர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்தில் சிக்கி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்ததால் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கினார்.

 

இதையடுத்து மத்திய அரசின் முயற்சியால் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு விமானப்படை தளபதி தானோவா உடன் இணைந்து விமானத்தை அபிநந்தன் இயக்கினார். போர் விமானத்தில் விமானப்படை தளபதியாக தனது இறுதி பயணத்தை மேற்கொண்டார்.

ராணுவ போர் விமானத்தில் பயணம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விமானப்படை தளபதி தானோவா 1988 ஆம் ஆண்டு சண்டையிடும்போது போர் விமானத்தில் இருந்து கீழே விழுந்ததாகவும், இருவருமே பாகிஸ்தான் எதிர்த்தால் சண்டை விட்டதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் அப்போது அபிநந்தன் தந்தையுடன் சென்ற நான், தற்போது அவருடன் விமானப்படை தளபதியாக போர் விமானத்தில் இறுதிப் பயணத்தை மேற்கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முப்படைகளுக்கு ஒரே தளபதியை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில்., தானோவா ஓய்வு பெற உள்ளார் என்பது கூடுதல் தகவல்.


Leave a Reply