நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி செலுத்தும் பிரிவினைகளை மாற்றுவதற்கான பரிந்துரை அரசு கணிக்கப்பட்டிருக்கிறது .நேரடி வருமான வரி விகிதங்களை மாற்றுவது தொடர்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் முதல் ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.
இந்த அமைப்பின் மூலம் தற்போது 5, 20, 30 ஆகிய மூன்று சதவீதம் நேரடி வருமான வரி விகிதப்படுகிறது. ஆனால் இந்த நடைமுறையை 5. சதவீத வரி கட்டமைப்பு கொண்டதாக மாற்ற அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 20 சதவீதத்திற்கு பதில் 10% வரி விதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 30 சதவீதத்திற்கு 20% வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய பரிந்துரைகளின்படி வருமான விசயங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டால் மத்திய அரசுக்கு வரி வருவாயில் சுமார் 50,000 கோடி ரூபாய் வரை குறைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.






