வங்கி மோசடியின் மதிப்பு 71,543 கோடியாக உயர்வு!

நாட்டில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி ரொக்கப்பணம் 21 லட்சத்து ஓராயிரம் கோடி ரூபாயாக இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 17 சதவீதம் அதிகம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

இதை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையில் கடந்த நிதியாண்டில் நாட்டில் நடைபெற்றுள்ள வாங்கிய மோசடிகளில் மதிப்பு 71,543 கோடியாக அதிகரித்துள்ளது.

 

இது முந்தைய நிதி ஆண்டை விட 15 சதவீதம் அதிகம் என்றும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 64 ஆயிரத்து 507 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மோசடிகளை தவிர்க்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது.


Leave a Reply