மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும், தற்போது இருக்கும் மாற்று திறனாளிகள் நல ஆணையர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை யினர் அரசு செயலர் ஆகியோரை மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சென்னை எழிலகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 1500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.


Leave a Reply