7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுவிக்கும் தமிழக அரசின் தீர்மானத்தின்படி தங்களை விடுவிக்குமாறு நளினி தமிழக அரசின் மனு அளித்தார்.
இந்த மனுவை பரிசீலிக்க தாமதமாவதால் உரிய முறையில் பரிசீலித்து தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்கனவே அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரைத்த நிலையில் மீண்டும் பரிந்துரைக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை என தெரிவித்த நீதிபதிகள் நளினியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.