தமிழக அரசின் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
73 பாடங்களில் உள்ள 2340 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத தேர்ச்சியுடன், Net, Slet, Set, CSIR ஆகியவற்றில் தேர்ச்சி அல்லது பிஹெச்டி படித்தவர்களாகவும் எடுக்க வேண்டும். ஆசிரியர்களாக பணியாற்றி.ய அனுபவத்திற்கு 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்கள், நேர்காணலுக்கு 10 மதிப்பெண்கள் என 34 மதிப்பெண்கள் வழங்கப்படும். உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.






