கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானலில் நிலவிவரும் குளிர்ச்சியான சூழலை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். குணா குகை, தொங்கும் பாறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தவாறு, மலைகளை உரசிச் சென்ற மேகக்கூட்டங்கள், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளையும் புகைப்படமெடுத்து ரசித்தனர்.

கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதாக இருந்த கொடைக்கானல், தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Leave a Reply