ஐ‌ஏ‌எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் ராஜினாமா!

கடந்த ஆண்டு கேரளா வெள்ளத்தில் மக்களோடு மக்களாக களமிறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். யூனியன் பிரதேசத்தில் பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன்.

 

திருச்சூர் அருகே புத்தம் பள்ளியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு கேரளாவில் புரட்டிப்போட்ட வெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அதிகாரி என்ற அடையாளத்தை மறைத்துக் கொண்டு தங்கள் ஊரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களை பிரித்தெடுக்கும் பணிகளில் வெகுநாட்களாக இருந்தார்.

 

ஒன்பதாவது நாள் பிற அதிகாரிகள் கண்டறிந்து அதை அடுத்து இந்த தகவல் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. கண்ணன் கோபிநாதன் பிரபலமடைந்தார். இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தனது ராஜினாமா கடிதம் ஏற்கப்படும் வரை தனது பணியை மேற்கொள்ள இருப்பதாக கண்ணன் கோபிநாதன் கூறியிருக்கிறார்.


Leave a Reply