பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா இறுதி மரியாதையில் துப்பாக்கி குண்டு வெடிக்காததால் காவல் துறை தோல்வி

பீகாரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராவிற்கு மரியாதை செலுத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் உரிய நேரத்தில் வெடிக்காததால் காவல்துறைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா அண்மையில் காலமானார்.

 

மிஸ்ராவின் பூர்வீக கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல துறை அமைச்சர்களும்., அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது ஜெகநாத் மிஸ்ராவிற்கு மரியாதை செலுத்த 21 குண்டுகள் முழங்க காவல்துறையினர் தயாராக இருந்தனர்.

ஆனால் துப்பாக்கியில் கோளாறு காரணமாக அவை வெடிக்கவில்லை. உடனே அங்கிருந்த காவல்துறை உயரதிகாரி சரி செய்ய முயற்சித்தால்., அதை ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் என பின்னர் தெரியவந்தது.

 

இது குறித்து விளக்கம் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் விவாதத்திற்கு உள்ளானது.


Leave a Reply