விபத்தில் சிக்கியவரிடம் நகையை பறித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு சரமாரி அடி

திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய பெண்ணிடம் நகையை திருடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை உறவினர்கள் சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பேருந்தின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்தமூன்று பேர் காயமடைந்தனர்.

 

அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மூவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லாவண்யா அணிந்துள்ள நகைகளை திருடியுள்ளார்.

பின்னர் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க சென்றுள்ளார். மயக்கம் தெளிந்த லாவண்யா தான் அணிந்திருந்த நகைகளை திருடபட்டிருப்பதை தெரிவித்தார். உடனடியாக அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பிடித்து சரமாரியாகத் தாக்கி விசாரித்துள்ளனர். நோய்களை திருடியதை ஒப்புக் கொண்ட அருண்குமாரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


Leave a Reply