ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தற்காலிகமானது. டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவன தலைவர் சீனிவாச வரதன் தெரிவித்துள்ளார். சமீப காலமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையாகாமல்ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியது.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத் தலைவர் சீனிவாச வரதன் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இருசக்கர மற்றும் நான்கு சக்கரங்களின் தேவை அதிகரித்து வருவதாகவும்,இருப்பினும் தற்போது ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளதாகவும் கூறினார்.
இதனை சரி செய்வது குறித்து அரசும் உற்பத்தி நிறுவனங்களும் இணைந்து பரிசீலனை செய்து வருவதாக ஸ்ரீனிவாச வரதன் தெரிவித்தார்.