கோவைப்புதூர் குழந்தை இயேசு கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இயற்கையை பாதுகாப்போம் என அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 73 வது சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை புதூர் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் நடைபெற்ற விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் கொடியேற்றி சிறப்புரை வழங்கினார் இதில் பேசிய அவர் அனைத்து மதத்தினரும் சமுதாய ஒற்றுமை யோடு நாட்டில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் இந்த நாளில் அனைவரும் இயற்கையை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்போம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவைப்புதூர் குழந்தை ஏசு ஆலயத்தின் பங்கு தந்தை ஆண்டனி வினோத் மற்றும் உதவி பங்கு தந்தை பெனிட்டோ உட்பட அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டனர்.