கோவையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி குழந்தைகள் இந்திய வரைபடம் போல் நின்று காட்சி அளித்தனர்.கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் பத்மினி ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இதில் பள்ளி முதல்வர் ஆண்டனி அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவை முன்னிட்டு பள்ளியில் அமைக்கப்பட்ட சிறிய பூங்காவை பள்ளியின் கார்னெட் ஹவுஸ் மாணவர்கள் திறந்து வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விமானப்படை குரூப் கேப்டன் சம்சத் தந்த்கர் கலந்து கொண்டு பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.
தொடர்ந்து விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார். விழாவில் பள்ளி மாணவ,மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.