மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது! வினாடிக்கு 2.40 லட்சம் கன அடி!

பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து, இன்று நீர் திறக்கப்பட உள்ள நிலையில் மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை கடந்தது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் காவிரி நீருக்கு பூஜை செய்தனர்.தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி, நெற்களஞ்சியமாக விளங்க, மேட்டூர் அணை நீர் பாசனம், முக்கிய ஆதாரமாக உள்ளது.

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம், 92 அடியை நெருங்கி விட்டது. நீர்வரத்து வினாடிக்கு, 2.40 லட்சம் கன அடியாக உள்ளது.

 

இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை கடந்தது.இதன் மூலம் 65-வது முறையாக 100 அடியை கடந்தது. அணைக்கு வினாடிக்கு நீர் வரத்து 2.50 லட்சம் கன அடி யாக உள்ளது. இ.பி.எஸ்.வருகை மேட்டூர் அணையில் நீர் திறந்துவிடுவதற்காக முதல்வர் இ.பி.எஸ். இன்று சேலம் வருகிறார். இன்று காலை, 8:30 மணிக்கு, மேட்டூர் அணையிலிருந்து, முதல்வர் தண்ணீர் திறந்து விட உள்ளார்.


Leave a Reply