திருவாடானையில் வனத்துறை அலட்சியத்தால் அடிக்கடி உயிரிழக்கும் மான்கள்

திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் தண்ணீர் தேடி கிராமத்துக்கு வந்த மானை நாய்கள் கடித்து மான் இறந்தது. இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் நாய் கடித்து குட்டி மான் இறந்தன குறிப்பிட தக்கது. மக்கள் தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் வராததால் ஆத்திரமுற்ற கிராம மக்கள்.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்திற்குள் இன்று காலை அஞ்சுகோட்டை கிராமம் அருகே 5 வயது உடைய ஆண் மான் தண்ணீருக்காக வந்தபோது நாய்கள் கடித்து குதறியது. உடன் அருகில் இருந்த கிராம மக்கள் நாய்களிடமிருந்து காப்பாற்றி வைத்து விட்டு வனச் சரக அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் அவர் தான் விடுப்பில் இருப்பதாக கூறி மற்றொரு அதிகாரி எண் 7904987010 கொடுத்தார்.

அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அந்த அதிகாரி போனை அட்டன் செய்யவே இல்லை.இது குறித்து அஞ்சு கோட்டையில் இருக்கும் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஆணிமுத்து கூறுகையில். அஞ்சுகோட்டை கண்மாய் நீண்ட பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாய் பகுதியில் அடர்ந்த காட்டு பகுதியாகவும் இருப்பதால் அதிக அளவில் புள்ளிமான்கள் காணப்படுகிறது.

 

திருவாடானை தாலுகாவில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் காட்டுக்குள் இருக்கும் மான்கள் குடிநீருக்காக கிராம பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் இடத்தை தேடும் பொழுது நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறி கொண்று விடுகின்றன இதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் மான்கள் வாழும் இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்.

 

இரவு நேரங்களில் தனி நபர்கள் த தாண்டி, காரைக்குடி, தேவகோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி வைத்து வேட்டையாடும் பொமுதும், மான்கள் துப்பாக்கி சத்தம் கேட்டு வெறித்து ஓடும் போதும் கிராமத்திற்குள் வருகிறது. எனவே இந்த கண்மாய் பகுதியை மான்கள் சரணாலயமாக அறிவித்து மான்களை பாதுகாக்க வேண்டும் இல்லையேல் இங்கிருக்கும் மான்களை பிடித்து சரணாலயத்தில்
கொண்டு போய் விடவேண்டும்.

எனவும் கோரிக்கை வைத்தனர். அப்படி செய்யாத பட்சத்தில் இதுபோல மான்கள் உயிரிஇழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்றும் தெரிவித்தார்கள். பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு வந்த வனசரக அலுவலர்கள் இறந்த மானை எடுத்துச் சென்று மருத்துவ பிரேத பரிசோதனைக்கு பின்னர் புதைத்தனர்.


Leave a Reply