பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக நுழைந்துள்ள வனிதா, தயவு தாட்சண்யம் இல்லாமல் விளாசி வருகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா இன்று விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். ஆட்டம் பாட்டம் என படு கலகலக்கலாக உள்ளே வந்தார் வனிதா.
வனிதாவின் விஜயம் புரமோவில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் வனிதா வந்த வேலை செய்யும் புரமோக்களும் வெளியாகி வருகின்றன.அதன்படி கஸ்தூரி, கவின், லாஸ்லியா என யாரையும் விடாமல் வச்சு செய்து வருகிறார் வனிதா.வனிதாவின் வருகையால் கவினும் லாஸ்லியாவும் மிரண்டு போயுள்ளது அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது.

மிஷன் லாஸ்லியா, வொர்த்லெஸ் கவின் என காலையிலேயே கடையை விரித்தார் வனிதா. அடுத்து, தர்ஷன் பக்கம் திரும்பிய வனிதா, மற்றவர்கள் விட்டு கொடுக்கும் டைட்டில் தான் உனக்கு வேண்டுமா? மற்றவர்கள் பிச்சை போட வேண்டுமா என கேட்டு திக்குமுக்காடச் செய்கிறார் வனிதா.
அண்ணா என்பதற்காக விட்டுக்கொடுத்து செல்ல இது என்ன கிழக்கு சீமையிலே படமா என்று கேட்டு வாயடைக்க செய்கிறார். அவரை தொடர்ந்து அப்பா, பொண்ணு என சேரன் மற்றும் லாஸ்லியாவையும் ஒரு கை பார்க்கிறார்.

விட்டுகொடுத்து போறதுக்கு இவர் அப்பா அது பொண்ணு என்றால் வீட்டுக்கு கிளம்புங்க என்று கூறுகிறார். வனிதாவின் நடவடிக்கைகளை பார்க்கும் போது ஒரு முடிவோடுதான் வந்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.






