காஷ்மீர் இனி வளர்ச்சியை நோக்கி நடைபோடும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், காஷ்மீர் இனி வளர்ச்சியை நோக்கி நடைபோடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று நூலின் முதல் பிரதியை அமித் ஷா வெளியிட, அதனை வெங்கய்ய நாயுடு பெற்றுக் கொண்டார்.

 

இந்த விழாவில் வெளியிடப்பட்டிருக்கும், குடியரசு துணைத் தலைவரின் நூல் அவருடைய வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. அரசியலிலும், பொது வாழ்விலும் ஈடுபடுபவர்களுக்கு இது சிறந்த வழிகாட்டி நூலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாணவர் பருவத்திலேயே போராடியவர் வெங்கய்ய நாயுடு.

 

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவை மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது அதை எப்படி வெற்றிகரமாக நிறைவேற்ற போகிறோம் என்ற தயக்கமும், கவலையும் இருந்தது. ஆனால் மசோதாவை வெங்கய்ய நாயுடுவின் சீரிய தலைமையால் மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றினோம்.

370-ஆவது சட்டப் பிரிவு ரத்துக்கு பிறகு, மற்றவர்களுக்கு குழப்பம், ஆனால் நான் தெளிவாக இருந்தேன். இனி காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழியும் என நம்புகிறேன். காஷ்மீர் இனி வளர்ச்சியை நோக்கி நடைபோடும் என்றார் அமித்ஷா. முதல்வர் எடப்பாடி பழனிசாமி- குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தமிழகத்தின் உற்ற நண்பர் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறுவார். அதே உறவையும், அன்பையும் இன்றளவும் தமிழகத்தின் மீது அவர் வைத்திருக்கிறார்.

 

தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் டிஜிட்டல் உரிமம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.
இதுபோல தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து உரிய ஆணையைப் பெறுவதற்கு துணையாக இருந்து வந்தார்.இன்றைக்கு வெளியிடப்பட்ட இந்த நூலில் குறிப்பிட்டுள்ள அவருடைய அனுபவங்கள், அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், குடியரசு துணைத் தலைவர் அவருடைய மாணவர் பருவத்திலிருந்து கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்வில் செய்திட்ட மக்கள் பணிகள், இப்போது குடியரசு துணைத் தலைவராக செய்துவரும் பணிகள் என அவருடைய வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் இந்த நூலுக்கு, கவனித்தல், கற்றல், தலைமையேற்றல் என்ற தலைப்பு மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது.

 

‘தொன்மையான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்’ என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கோரிக்கை விடுத்தார்.விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, இந்திய பாட்மிண்டன் அணி பயிற்சியாளர் கோபிசந்த், அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட பலர் பேசினர்.


Leave a Reply