யூனியன் பிரதேசமாக மாறும் ஜம்மு காஷ்மீர்

அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியம் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்க மத்திய அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்தது.

 

பின்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு, குடியரசுத் தலைவரும் அந்த மசோதவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி முதல் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படவுள்ளது.இதற்கான அறிவிப்பை உள்துறை அமைச்சம்வெளியிட்டுள்ளது.


Leave a Reply