கோவையில் பெய்து வரும் கன மழை காரணமாக,கல்லூரி விடுதியின் சுற்றுச்சுவர் மற்றும் பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாககன மழை பெய்து வருகிறது. இதனால், புறநகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு, சாலைகள் வெள்ளத்தில்அடித்து செல்லப்பட்டது. மாதப்பட்டி பகுதியில் பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பேரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி (சேரன் கல்லூரி) விடுதியின் நீளமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
சிங்காநல்லூரிலிருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் நொய்யல் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதியினர் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். இதேபோல், மாநகரின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்து உள்ளது.