கோவையில் சினிமா துறை சார்ந்த 3டி அனிமேஷன் போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி மையம் துவக்கம் !!!

கோவையில் சினிமா துறை சார்ந்த 3டி அனிமேஷன் போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. பல்வேறு நவீன தொழில்நுட்பத்தில் நமது நாடு வேகமாக முன்னேறி வரும் நிலையில் தற்போது சினிமா துறை சார்ந்த 3டி அனிமேஷன் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் சினிமா துறை மட்டுமல்லாது கல்வி விளையாட்டு என அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறது.

இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு என சென்னை மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு சென்று மட்டுமே பயிற்சி பெற வேண்டி இருந்தது. இந்நிலையில் கோவையில் மாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக் எனும் பயிற்சி மையம் கோவை சரவணம்பட்டி பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.இதற்கான துவக்க விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இந்த மையத்தில் அனிமேஷன் ப்ரோக்ராம், விசுவல் எபெக்ட்ஸ், மல்ட்டி மீடியா , கேமிங் என பல்வேறு துறைகளில் உள்ள நவீன தொழில்நுட்ப பிரிவுகளை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், இளம் தலைமுறையினரின் புதிய பரிணாமத்தில் இந்த மையத்தில் பயிற்சி அளித்து இளம் தொழில் முனைவோர்களாக அவர்களை ஆக்குவதே இந்த மையம் துவங்கியதின் நோக்கம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply