பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.மறைந்த அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் மறைந்த நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது.

 

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில், பாரத ரத்னா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தார்.புதுடில்லி: பாரத ரத்னா விருது வழங்கல்… முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

 

மறைந்த அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் மறைந்த நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது.

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில், பாரத ரத்னா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தார்.

 

மறைந்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் நானாஜி தேஷ்முக்கிற்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவர் சார்பில், தீனதயாள் ஆராயச்சி மையத்தின் தலைவர் வீரேந்திரஜித் சிங்கும், மறைந்த அசாம் பாடகர் பூபென் ஹசாரிகாவுக்கு பதிலாக, அவரது மகன் தேஷ் ஹசாரிக்கா பாரத ரத்னா விருதைப் பெற்றுக் கொண்டார்.

 

பாரத ரத்னா விருது பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.


Leave a Reply