இந்தியாவில் முதன் முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை விரைவில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் நீருக்கு அடியில் முதன் முதலாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதை கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றை கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆறுகளின் மேலே மேம்பாலம் அமைத்து தான் பாதை அமைப்பார்கள்.ஆனால் ஹூக்ளி ஆற்றுக்கு கீழே சுரங்க பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 520 மீட்டர் தூரத்துக்கு சுரங்கு பாதை அமைக்கும் பணி நடந்தது.
ஆற்றுக்கு கீழே 30 மீட்டர் ஆழத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.இதன் வழியாக ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதால், விரைவில் இந்த பாதையில் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.