சாவித்ரி வாழ்க்கை வரலாற்றில் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.திரைப்பட தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக பாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தெலுங்கு மொழி படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மகாநடி’ திரைபப்டத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிக்கையாக மகாநடியில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது உறி படத்தில் நடித்த விக்கி கௌஸலுக்கு உரி படத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது.சிறந்த ஹிந்தி மொழி படத்திற்கான தேசிய விருது ஸ்ரீராம் ராகவன் இயக்கிய ‘அந்தாதுன்’ படத்திற்கு அறிவிப்பு.
‘பத்மாவத் படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்-க்கான தேசிய விருது ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்திற்கு அறிவிப்புசர்ஜிகல் தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘உரி’ திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிப்பு திரைப்படம் எடுக்க உகந்த மாநிலம் உத்தராகண்ட் மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.