இராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட SDPI கட்சியினர் கைது

மத்திய அரசை கண்டித்து இராமநாதபுரம் ரயில் நிலையம் முன் முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சோமு தலைமை வகித்தார்.முன்னாள் மாவட்ட தலைவர் முன்னிலை வகித்தார்.மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது கண்டன உரையாற்றினார்.

 

மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது இப்ராஹிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில சுயாட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அதிவிரைவாக நிறைவேற்றிய 30 சட்ட மசோதாக்களில், மாநில சுயாட்சிக்கு எதிரானஇந்திய அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்க வேண்டும்.

மத்திய அரசின் என்.ஐ.ஏ திருத்தம் உட்பட காஷ்மீர் சுயாட்சி உரிமை பறிப்பு உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளை விலக்கி கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முற்றுகை போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ரயில் முற்றுகைக்கு முயன்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply