தேவாலயத்தில் ஆண் ஒருவர் குத்திக் கொலை!

தேவாலயத்தில் ஆண் ஒருவர் குத்திக் கொலை.ரொரன்ரோ குடியிருப்புப் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து ஆண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.St. Clair Avenue மற்றும் Rushton வீதியில் அமைந்துள்ள சென் மத்தியூஸ் யுனைட்டட் தேவாலயத்தில் நேற்று பிற்பகல் 3:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

வீடற்ற ஒருவருக்கும் அங்குள்ள பணியாளர் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன்போது அந்த வீடற்ற நபரை மற்றையவர் கத்தியால் குத்தினாராம்.இதில் படுகாயமடைந்த அவர் உயிராபத்தான நிலையில் மருத்துமவனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், அங்கு சென்றடைந்த வேளையில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த நிலையில் குறித்த அந்தப் பணியாளரைக் காவல்துறையினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். எனினும் அவர் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்ற விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.


Leave a Reply