காஞ்சிபுரத்திற்கு காரில் சென்ற போது  சாலைவிபத்தில் தந்தை, மகன் பலி

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவபட்டி, ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

 

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சொகுசு காரில் நேற்று காலை  புறப்பட்டு சென்றுள்ளனர்.தருமபுரியை அடுத்த சேசம்பட்டி பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் மோதி, சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சுப்புராஜ், அவரது மூன்று வயது குழந்தை விவன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

விபத்தில் காயமுற்ற சுப்புராஜின் மனைவி கிருத்திகா, நண்பர் மகேந்திரன் அவரது மனைவி அனிதா, மற்றும் மகேந்திரனின் 3 வயது குழந்தை கிருஸ்வினாயக் ஆகிய 4 பேரையும் பொதுமக்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply