உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ‌சி‌யுவில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு சிகிச்சை நடந்து வருவதாகவும், ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

பல்வேறு துறை சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அருண் உடல்நிலை குறித்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அருண் ஜெட்லி, கடந்த 2014-2019 இடையிலான மோடி அரசின் போது மத்திய நிதியமைச்சராக செயலாற்றினார். இவருக்கு வயது 66. கடந்த 2018 ஆம் ஆண்டு, அருண் ஜெட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் மருத்துவ பரிசோதனையில் இருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில், தான் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி இருப்பதாக முடிவு செய்துள்ளேன் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.இந்நிலையில் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


Leave a Reply