செல்போன்கள் ஏற்படுத்தும் விபரீதங்களை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புளுவேல் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. செல்போன்கள் உண்டாகக்கூடிய பயன்கள் ஒரு புறம் இருந்தாலும் அதன் மூலம் ஏற்படும் விபரீதங்ளையும் ஆங்காங்கே காண முடிகிறது.

செல்போனால் ஏற்படும் பாதிப்புகளை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் புளுவேல். (blue wale ) இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

டீசர் வெளியீட்டிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் அருமை சந்திரன், செல்போனால் இச்சமுதாயத்தில் ஏற்படும் விபரீதங்களையும், பின்விளைவுகளையும் எடுத்து கூறும் விதமாக புளுவேல் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.இதன் மூலம் பொது மக்களுக்கு செல்போன் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.






